’யோலோ’ விமர்சனம்

130

நடிகர்கள் : தேவ், தேவிகா, படவா கோபி, விஜே நிக்கி
இசை : சகிஷ்னா சேவியர்
ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி
இயக்கம் : சாம்.எஸ்
தயாரிப்பு : மஹேஷ் செல்வராஜ்

யோலோ என்ற யுடியூப் சேனல் மூலம் ப்ராங்க் வீடியோ எடுப்பதை தொழிலாக செய்யும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் நடக்காத திருமணத்தை நடந்ததாக சிலர் ஆதாரங்களுடன் நிரூபிப்பதோடு, அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் தங்களது திருமண நடந்திருப்பதால் அதிர்ச்சியடையும், நாயகனும், நாயகியும் அதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அவர்களது திருமண ரகசியத்தின் பின்னணி என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் தான் ’யோலோ-வின் கதை.

நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இளமை துள்ளலோடு படம் முழுவதும் ஜொலித்திருக்கிறார்கள். இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பயாலஜி என அனைத்தும் கச்சிதமாக பொருந்துவதால் படம் முழுவதும் பார்வையாளர்கள் இந்த ஜோடி சிறப்பாகவே பொழுதுபோக்கியிருக்கிறது.

நாயகியை பெண் பார்க்க வரும் விஜே நிக்கியின் கதாபாத்திரம் திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்தாலும் அவர் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சூராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது.

படத்தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷின் பணியிலும் குறையில்லை.

ராம்ஸ் முருகன், சாம்.எஸ், பன்பு செல்வன், மகேஷ் செல்வராஜ் ஆகியோரது எழுத்தில் இளமை ததும்புகிறது. அதே சமயம் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தை இயக்கியிருக்கும் சாம்.எஸ், படத்தை காமெடியாக சொல்ல முயற்சித்திருந்தாலும், சிரிப்பு சத்தம் என்னவோ குறைவாக தான் கேட்கிறது. வில்லன், கோமாவில் இருந்த வில்லி என்று படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், எதையும் முழுமையாக சொல்லாததால், படம் சற்று தொய்வாகவே நகர்கிறது.

ரேட்டிங் 2.6/5

Comments are closed.