’கொலை’ விமர்சனம்

295

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்
இயக்கம் : பாலாஜி குமார்
தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்

இயக்குநர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில், க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘கொலை’ எப்படி இருக்கு?, விமர்சனத்தை பார்ப்போம்.

பிரபல மாடல் அழகியான லைலா அவரது வீட்டில் கொலை செய்யப்படுகிறார். பூட்டிய வீட்டுக்குள் நடந்த கொலை வழக்கை இளம் போலீஸ் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்க, ரித்திகா சிங்கிற்கு உதவி செய்ய விசாரணை களத்தில் இறங்குகிறார் துப்பறிவாளரான விஜய் ஆண்டனி. இருவரும் சேர்ந்து விசாரணை மேற்கொள்ளும் கொலை வழக்கு எப்படி பயணிக்கிறது, கொலையாளியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார், என்ற ரீதியில் கதை பயணிக்கிறது.

துப்பறிவாளர் வேடத்தில் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நுணுக்கமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் கண்களினாலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்துபவர், அழுகின்ற காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், ஆர்பாட்டம் இல்லாத அளவான நடிப்பால் கவர்கிறார்.

மாடல் அழகி லைலாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகை மீனாட்சி செளத்ரி, தனது சிறப்பான நடிப்பு மூலம் நிஜ மாடலிங் பெண்ணாக வலம் வருகிறார்.

லைலாவின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், அமைதியான முகம், உடல் மொழி என கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார்.

முரளி சர்மா, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, இயக்குநரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வகையிலும் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனில் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ரெகுலர் க்ரைம் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும் அதை இயக்குநர் பாலாஜி குமார் வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார். குறிப்பாக படம் முழுவதும் ஏதோ ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் எந்த ஒரு இடத்திலும் அதிகமாக நடிக்காமல், அளவாக நடித்திருப்பது படத்தின் தனி சிறப்பாக இருப்பதோடு, காட்சிகள் மற்றும் திரைக்கதை மெதுவாக பயணிப்பது போல் இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதத்தில் பயணித்திருக்கிறது.

லைலா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அவசர வழியும், அந்த கட்டிடத்தின் காவலர் கேட் அருகே இல்லாமல், வரவேற்பு அரையில் இருப்பது, திரைக்கதையை பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது. அந்த பலவீனத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘கொலை’ நிச்சயம் நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி ஹாலிவுட் தரத்திலான க்ரைம் த்ரில்லர் ஜானர் படமாக ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.