
டார்லிங், கூர்க்கா, “100” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். குறிப்பாக 1௦௦ திரைப்படத்தில் இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடித்த ‘மாறா’ படத்தை தயாரித்த சுருதி நல்லப்பா இப்படத்தினை தயாரிக்கிறார்.
இந்தப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. இணையவழி குற்றங்கள் அதாவது Dark Web) தான் இப்படத்தின் பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பல புதுமையான ஆக்சன் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றனவாம். அதற்காகவே சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் அதர்வா..
இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக இடம்பெற இருக்கிறது.. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Comments are closed.