யார் ? எங்கே ? ஏன் ? விடை தேடுவதற்காக இயக்குனராக மாறிய ஒளிப்பதிவாளர் கே.வி.குகன்

222


பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘WWW’ (அதாவது ( Who, Where, Why ) கதாநாயகனாக, ஆதித் அருண் நடிக்க, ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் எண்பது, தொண்ணூறுகளில் தெலுங்கு மற்றும் டப்பிங் படங்கள் மூலம் தமிழ் சினிமாவை கலக்கிய டாக்டர் ராஜசேகரின் மகள்.

சமீபத்தில் இந்தப்படத்தின், டீஸரை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் படத்தில் நடித்துள்ள ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், நாயகன் ஆதித் அருணின் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தப்படத்திற்கு தானே ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் திரில்லராக உருவாகியுள்ளது.

Comments are closed.