“இலங்கை இசை நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை” – விஜய் டி.வி விளக்கம்

247

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளார். இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச்-1 மற்றும் 2ஆம் தேதிகளில் இலங்கை கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவுள்ள இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இதனை கோரல் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் எனும் இலங்கையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இவர்களின் இந்த இலங்கை பயணத்திற்கு மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதை முன்னின்று நட்த்த இருப்பதாக விஜய் டிவிக்கும் கண்டனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் விஜய் டி.வி இன்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நாங்கள் ஒருபோதும் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான நிகச்சிகளை நடத்துபவர்கள் அல்ல.. ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியை நாங்கள் நட்த்த இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. தமிழ்ர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு செயலை நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம்.. இதுவரை இலங்கையில் நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நட்த்தியதும் இல்லை. அதேபோல இப்போது நடக்க இருப்பதாக சொல்லப்படும் நிகழ்ச்சியிலும் ஒரு சதவீதம் கூட எங்கள் பங்களிப்பு இல்லை என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்சியை நட்த்த விரும்பும் நிறுவனத்துக்கும் இது குறித்து எச்சாரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “தாங்கள் கொழும்பில் நடத்த இருக்கும் நிகழ்ச்சியில எங்களது நிறுவனத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப்ப்ட்டு வருகிறது. எங்கள் விஜய் டி.வி மற்றும் சூப்பர் சிங்கர் நிறுவனத்தின் பெயரை தாங்கள் எங்கும் பயன்படுத்த கூடாது.. மேலும் தங்கள் நிகழ்ச்சிக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்..” என்று கூறப்பட்டுள்ளதோடு, “இதற்கெல்லாம் மேலாக தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமான இந்த நிகழ்ச்சியை நடத்தாமல் தவிர்ப்பதே நலம்” என்று அறிவுரையும் சொல்லப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் தமிழ்ப்பற்றுக்கு நமது நன்றிகள் பல.. சம்பந்தப்பட்ட நன்றிகெட்ட ஜென்மங்கள் இனிமேலாவது திருந்தினால் சரி..

Leave A Reply

Your email address will not be published.