ஹேப்பி பர்த்டே கௌதம் மேனன்..!

303

கௌதம் மேனன்.. இன்றைய தமிழ்சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களை பட்டியலிட்டால் முதல் ஐந்து பேரில் இவருக்கு ஒரு இடம் கட்டாயம் இருக்கும். எங்கிருந்து தான் இவருக்கு இவ்வளவு அருமையான ரசனைகள் உற்பத்தியாகின்றதோ என படம் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாக, இவரது ஒவ்வொரு படங்களிலும் ஒரு கவித்துவம் நிறைந்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

Related Posts

‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ என ஒருசமயத்தில் ஆக்‌ஷன் முகம் காட்டினாலும் தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என இளைஞர்களின் காதல் பொங்கும் இதயங்களையும் சீண்டிப்பார்க்க இவர் தவறியதும் இல்லை..

இதோ சிம்புவை வைத்து தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் கௌதம், அடுத்ததாக மார்ச் மாதம் அஜித்தின் 55வது படத்தை துவங்க இருக்கிறார். இந்த சந்தோஷமான தருணத்தில், இன்று பிறந்தநாள் காணும் கௌதம் மேனனுக்கு நமது ‘behind frames’ தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

1 Comment
  1. sweet-bonanza.org.kz says

    318079 739998some truly intriguing information , effectively written and broadly speaking user genial . 434484

Leave A Reply

Your email address will not be published.