அஜித் 55, 56, 57, 58,…..? இயக்கப்போவது யாரு..?

231

இரண்டு மாத இடைவெளியில் இரண்டு படங்கள்.. இரண்டுமே பாராட்டக்கூடிய வெற்றிகள்.. இதுதான் அஜித்தை தற்போது டோட்டலாக மாற்றியிருக்கிறது. வருடத்துக்கு இரண்டு படம் தந்துவிடுவது என்ற உறுதியை அஜித் எடுத்ததால் தான் ‘வீரம்’ ரிலீஸான உடனேயே அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

முன்பெல்லாம் ஒரு படம் முடிந்து நீண்ட நாட்கள் கழித்து தான் அஜித் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதே தெரியவரும்.. ஆனால் இப்போது அவரை அடுத்தடுத்து இயக்க இருக்கும் டைரக்டர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கௌதம் மேனன் இயக்குவது அஜித்தின் 55வது படம். இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த்(56), அதன்பின் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன்(57), தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா(58) இயக்கத்தில் ஒரு படம் என அஜித்தின் கால்ஷீட் டைரி பகிரங்கமாகவே திறந்து காட்டப்பட்டிருக்கிறது.

இதைத்தாண்டி அஜித்தை வைத்து படம் இயக்க விரும்பும் மற்ற இயக்குனர்கள் குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்கத்தான் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.