ரியாமிகாவுக்கு சி.வி.குமார் வழங்கிய ஒன் பிளஸ் ஒன் ஆஃபர்..!

262

riyamika

சமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.. படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தாதது.. ஆனால் தற்போது வெளியான X வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.

X வீடியோஸ் படத்த்தை தொடர்ந்து ‘அகோரி’ என்கிற படத்த்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.

“இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்.”என்கிறார் ரியாமிகா

‘மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரியாமிகா. ஆனால் இவரை சி.வி.குமார் முதலில் அழைத்தது தான் தயாரிக்கபோகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் இவருக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாராம்.

“என் படங்களை பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு.. அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்” என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்பு பயிற்சி என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.

Comments are closed.