நரகாசூரன் இயக்குனரிடம் அரவிந்த்சாமி வைத்த கோரிக்கை

244

naragasooran press meet

துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கிவரும் ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது.

Related Posts

அத்துடன் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மீகா என இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திர கூட்டணியும் பிரமிப்பை உருவாக்கவே செய்திருக்கிறது.

வரும் ஆகி-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஸ்ரேயா லண்டனில் ஒரு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. மற்றபடி படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அரவிந்த்சாமி, தன்னை இந்தப்படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோதே இயக்குனர் கார்த்திக் நரேனிடம், தனக்காக என்று கதையில் எந்த மாற்றமும் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

Comments are closed.