கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபுதேவாவை ஸ்தம்பிக்க வைத்த தயாரிப்பாளர்கள்..!

199

lakshmi gift

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘‘லக்‌ஷ்மி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. உணர்வுகளும், பிரியாவிடையும் பிரபுதேவா நடித்துவரும் ‘லக்‌ஷ்மி’ பட ஷூட்டிங்கிலும் ரொம்பவே மிகுந்திருந்தது.

அதுமட்டுமல்ல, லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. காரணம் பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தியும், ஷ்ருதி நல்லப்பாவும் பிரபுதேவாவுக்கு பரிசளித்த அற்புதமான ஓவியம் தான்.

மேலும் இந்தப்படம் குறித்து அனுபவம் பற்றி சொலும்போது, “பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார்” என்றார் படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி.

தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்போது, “இயக்குனர் விஜய் ஒரு கண்னியமான மனிதர், தயாரிப்பாளருக்கு தோள் கொடுக்கும் நண்பர். தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அவரின் யோசனைகள், திட்டமிடல், செயல்படுத்தும் விதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர். வெளியில் கேட்டதை விட, லக்‌ஷ்மி படத்தின் மூலம் நாங்கள் அனுபவத்திலேயே அவற்றை உணர்ந்திருக்கிறோம்” என்றார்.

லக்‌ஷ்மி படத்துக்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த இசையமைக்கிறார். மாயாஜால ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னொரு தயாரிப்பாளராக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவியும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

Comments are closed.