ஹேப்பி பர்த்டே இமான்..!

192

இன்றைய தமிழ்சினிமாவின் இசை ராஜாங்கத்தை ஆட்சி செய்வது சட்சாத் இசையமைப்பாளர் டி.இமான் தான். ‘மைனா’, ‘கும்கி’ என இவர் இசையமைக்கும் படங்கள், அவரது அடுத்த படம் வரும் வரை ரசிகர்களை அங்கிட்டு இங்கிட்டு என எங்கும் நகரவிடாமல் தேசியகீதம் போல முணுமுணுக்க வைக்கும் சக்தி கொண்டவை.

கடந்த நான்கு மாதங்களாக சேனல்கள், எஃப்.எம், மியூசிக் ஷோ என எந்தப்பக்கம் திரும்பினாலும் இமானின் ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல்தான். இப்போது பொங்கலில் இருந்து ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலும் ‘ஜிங்குனமணி’ பாடலும் ரசிகர்களின் காலர் டியூனை குத்தகைக்கு எடுத்திருக்கின்றன.

எப்போதும் புன்னகை முகமாகவே காட்சியளிக்கும் இமானின் தோற்றம் எதிரில் நிற்பவர்களுக்கும் அந்த பாஸிட்டிவ் எனெர்ஜியை தொற்றிக்கொள்ளச் செய்யும். இன்று பிறந்தநாள் காணும் இமானுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

1 Comment
  1. Book of Ra says

    132970 386769I likewise believe thus, perfectly pent post! . 224592

Leave A Reply

Your email address will not be published.