“அலியா பட் என் படத்தில் நடிக்கவில்லை” – தனுஷ்

66

தமிழ்சினிமாவுக்கு அலியா பட் என்கிற இன்னொரு பாலிவுட் அழகுக்கிளி பறந்து வருகிறது என கனவு கண்டார்கள் ரசிகர்கள். அதுவும் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக . ஆனால் தனுஷோ இந்த செய்தியை மறுக்கிறார்.

“நண்பர்களே.. என் படத்தைப்பற்றிய முக்கியமான செய்தி எதுவும் இருந்தால் அதை உங்களுக்கு தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். தற்போது அலியா பட் என் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் துளிகூட உண்மையில்லை” என பொசுக்கென்று ஒரு ட்வீட்டை தட்டிவிட்டிருக்கிறார்.

இந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அலியா பட். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்த இவர், கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. இப்போது இந்தப்படத்திலும் அவர் ஜோடி இல்லையென்கிறார் தனுஷ்.

Leave A Reply

Your email address will not be published.