“நமக்கு எப்பவும் நம்ம நாடுதாங்ணா’” – ரசிகருக்கு இளையதளபதி பதில்

211

எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்..? “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்.. நான் ரெடி” என தனது சமூக வலைதளப் பக்கத்தை அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறார் விஜய்.

அத்துடன் தனது ரசிகர்களுடன் முக்கால் மணிநேரம் சாட்டிங் செய்து அவர்களுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலும் அளித்திருக்கிறார். அதில் தனது ரசிகர்களும் அஜித்தின் ரசிகர்களும் மோதிக்கொள்ளும் போக்கை எல்லாம் கைவிட்டு விடுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார் விஜய்.

கூடவே மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கும் ஆசையை அதுவும் மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய். அதில் ஒரு ரசிகர் தலைவா நீங்க எப்ப பாலிவுட்டுக்கு போகப்போறீங்க என கேட்டுவைக்க, அதற்கு விஜய் சொன்ன பதில், “ண்ணா.. நமக்கு எப்பவும் நம்ம நாடு தாங்ணா”.

Leave A Reply

Your email address will not be published.