
நடிகர்கள் : இளமாறன், ஜெயராஜ், பசி சத்யா, விஜயா மாமி, வழக்கு எண் முத்துராமன், நரேன், பாலா
இசை : ப்ளூ சட்டை மாறன்
ஒளிப்பதிவு : கதிரவன்
தயாரிப்பு : ஆதம் பாவா
இயக்கம் : ப்ளூ சட்டை மாறன் இன்கிற இ.இளமாறன்
மதத்தின் பெயரால் மக்களிடம் ஏற்படும் பிரிவினை, அந்த பிரிவினையை வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகளும், அரசியல்வாதிகளும் பிழைப்பு நடத்துவதற்காக மக்களை எப்படி பலிக்கடாவாக்குகிறார்கள் என்பதை உயிரற்ற உடல் மூலம் விவரித்திருப்பது தான் ’ஆன்டி இண்டியன்’.
பிணமாக நடித்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், படத்தின் ஆரம்பக்காட்சி, இடைவேளை மற்றும் இறுதிக்காட்சி என்று மூன்று இடங்களில் தனது முகத்தை க்ளோஷப்பில் காட்டும்போது ஒரு நடிகராக பாராட்டு பெறுகிறார்.
இறந்தவரின் தாய்மாமனாக நடித்திருக்கும் ஜெயராஜ், விஜயா மாமி, பசி சத்யா, வழக்கு எண் முத்துராமன், பாலா என படத்தில் நடித்த அனைவரும் குறையில்லாமல் நடித்திருப்பதோடு, கதாப்பாத்திரத்திற்கு மிக பொருத்தமாகவும் இருக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ப்ளூ சட்டை மாறன் தான் இசையும் அமைத்திருக்கிறார். கதைக்களத்திற்கு ஏற்றவாறு கானா பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பின்னணி இசையையும் கதக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார்.
படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நடிகர்களாக காட்டாமல், கதை நடக்கும் மண்ணின் மனிதர்களாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிரவனின், இயல்பான பணி திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்துள்ளது.
மதத்தின் பெயரால் மக்கள் எப்படி மூட்டாளாக்கப்படுகிறார்கள் என்பதோடு, அம்மக்களை வைத்து நடக்கும் அரசியல் மற்றும் அதன் பின்னணி நடக்கும் சமூக சீர்கேடுகளை நையாண்டியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன், நம்மை சிந்திக்க வைப்பதோடு, சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், விமர்சகராக பல படங்களை கிழித்த ப்ளூ சட்டை மாறனின் ’ஆண்டி இன்டியன்’ படத்தை கொண்டாடலாம்.
Comments are closed.