ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது.
ஜீவா, ‘கடல்’ துளசி நடிக்க ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப்படத்தில் ‘போலீஸ்’ அதிகாரியாக நடிக்கிறார் ஜீவா. அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், கலைக்கு சாபுசிரில் மற்றும் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி என படத்தில் ஹைடெக் டெக்னீஷியன்கள் பலர் கைகோர்த்துள்ளனர். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அக்டோபர்-2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று ‘யான்’ ரிலீசாகிறது.
Comments are closed.