“சீனியர் ஹீரோக்களுக்கும் கதை எழுதுங்க” – கமல் வேண்டுகோள்

187

இன்றைக்கு புதிது புதிதாக சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களானாலும் சரி, ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்டவர்களானாலும் சரி.. தங்கள் மூளையை கூர் தீட்டிக்கொண்டு யோசிப்பது இளைஞர்களுக்கான, இளைய ஹீரோக்களுக்கான கதையைத்தான்..

ஆனால் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு இலக்கிய கருத்தரங்கில் பேசிய கமல், “புதிய எழுத்தாளர்களின் கவனம் கொஞ்சம் சீனியர் நடிகர்களுக்கான கதை எழுதுவதிலும் திரும்பவேண்டும்..” என்று கூறியதோடு அதற்கு ஹாலிவுட்டையும் உதாரணம் காட்டியுள்ளார்.

மேலும் பாலிவுட்டில் அமிதாப் இன்னும் ஒரு நடிகனால் நீண்ட காலம் தொடர்ந்து நடிக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் நிரூபித்து வருவதற்கு காரணம் அவர்க்கேற்றாற்போல் அமையும் கதைகள் தான் என்று கூறியுள்ளார் கமல்.

Comments are closed.