நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘கோச்சடையான்’ இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ஷாருக், “தமிழில் எனக்கு மிகவும் தெரிந்த ஒரு வார்த்தை தலைவா.. அந்த வார்த்தை தான் என்னை இந்த விழாவிற்கு இழுத்து வந்துள்ளது. 24 வருடங்களுக்கு முன்பு இந்தி சினிமாவில் நான் நுழைந்த தருணத்தில் ரஜினியை நான் பார்த்தது அவர் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்க முயற்சி செய்துகொண்டு இருந்ததைத்தான்.. அப்போதுதான் கடின உழைப்பு ஒன்றே வெற்றிக்கான சாவி என்பதை புரிந்துகொண்டேன். ஒரு ரஜினி ரசிகனாக இங்கே வந்திருப்பதில் சந்தோசப்படுகிறேன்” என்றார்.
விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார், “சிறுவயதிலேயே எனக்கு ரொம்ப பிடித்தது ராஜா ராணி கதைகள் தான். நான் ஒரு புத்தகத்தை வாங்கினால் அதில், ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தானாம்” என்று ஆரம்பிக்கிறதா என் ஆர்வமாக பார்ப்பேன். இப்போது அப்படி ஒரு கதையிலேயே நடித்திருப்பது சந்தோஷமான விஷயம்.. இந்தப்படத்தில் கிராஃபிக்ஸ் மூலம் என்னை இன்னும் இளமையாக காட்டியிருப்பதை பார்க்கும்போது ஆச்சர்யம் ஏற்படுகிறது” என்று கூறினார்.