இது உண்மையிலேயே சினிமா ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட் தான். இப்போதுதான் தமிழ்சினிமாவில் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கும் நஸ்ரியா என்னும் அழகுப்புயல் இவ்வளவு சீக்கிரம் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என யார்தான் எதிர்பார்த்திருக்க கூடும்..?
இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸிலை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார் நஸ்ரியா.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த வருடம் தான் தன்னுடன் இணைந்து நடித்த ஆண்ட்ரியாவை காதலிப்பதாக ஃபஹத் ஃபாஸில் அதிர்வெடி ஒன்றை பற்றவைத்தார். ஆனால் ஆண்ட்ரியா அதை அப்போதே மறுத்ததுடன் அதன்பிறகு ஃபஹத் ஃபாஸிலுடன் இணைந்து நடிக்கவந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.
ஆனால் ஒரு காதல் தோல்விக்கு மருந்து இன்னொரு காதல் தானே.. அது இப்போது ஃபஹத் ஃபாஸில் விஷயத்தில் உண்மையாகி விட்டது.. இப்போதுதான் நஸ்ரியாவும் ஃபஹத் ஃபாஸிலும் இணைந்து அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்குள் இவ்வளவு சீக்கிரம் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, அது திருமணம் வரை சென்றிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தான்.