“நான் ஹீரோவானதால் என் அம்மாவுக்கு பயம் வந்துவிட்டது” – சந்தானம்

123

சந்தானம் முதன்முறையாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் இல்லையா..? அதில் அவர் என்னவோ ஜாலியாகத்தான் இருக்கிறார்.. ஆனால் சந்தானத்தின் அம்மாவோ தன் மகன் ஹீரோவாக ஆகிவிட்டதால் கூடுதல் டென்சனிலும் கொஞ்சம் பயத்திலும் இருக்கிறாராம். சொல்லப்போனால் அவருக்கு தன் மகன் ஹீரோவாக நடிப்பதில் விருப்பமே இல்லையாம்.

“என் அம்மாவுக்கு எங்கே நான் ஹீரோவாக நடிக்கும் படம் சரியாக ஓடாவிட்டால் எனக்கு அடுத்தடுத்து காமெடி கேரக்டர்களில் நடிக்கவரும் வாய்ப்பும் நின்றுவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அத்துடன் நான் காமெடியனாக நடித்துக்கொண்டு இருக்கும்போது கைநிறைய படங்களுடன் பிஸியாக இருப்பேன்.. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டால் வருஷத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் நினைத்துவிட்டார்கள்.

ஆனால் நான் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல கதை என்பதால் அவர்கள் கவலைப்படுவதை நான் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டாலும் எனக்காக அதிகம் பிரார்த்தனை செய்பவர் அவர் தான்” என நெகிழ்கிறார் சந்தானம்.

Comments are closed.