“கோச்சடையானில் கமல் நடித்திருக்க வேண்டும்” – சொன்னது யார் தெரியுமா..?

137


படிக்கும்போதே யார் இப்படி சொன்னது என கோபமும் ஆச்சர்யமும் ஏற்படுகிறதா…? மேலே படியுங்கள்.. சில தினங்களுக்கு முன் ‘கோச்சடையான்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘விக்ரமசிம்ஹா’வின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினியின் மிக முக்கிய நண்பர்களான மோகன்பாபு, இயக்குனர் தாசரி நாராயணராவ், தயாரிப்பாளர் ராமநாயுடு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ரஜினி பேசியதுதான் ஹைலைட்டான விஷயம்.

“இந்தப்படம் தொழில்நுட்பங்கள் நிறைந்த அதேசமயம் தத்துவார்த்தமான படம்.. இதில் கமலைப் போன்ற ஒருவர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காரணம் கமல் சிறந்த நடிகர் மட்டுமல்ல.. தலைசிறந்த டெக்னீசியனும் கூட” என்று கமலுக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார் ரஜினி. ஆகவே.. சொன்னது ரஜினி தான் என்பதால் கோபம் தணியுங்கள் ரசிகர்களே..

Comments are closed.