ஏற்கனவே சொன்னபடி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ள கமல், நேற்று இரவு இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதன்மூலம் அந்தப்படம் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது கைக்கு வந்துவிட்டதையும் குறிப்பால் உணர்த்தியுள்ளார்..
பர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனது மார்பின் மேல் போர்த்திய மூவர்ண தேசிய கொடியை பிடித்திருப்பதன் மூலம் கமலின் நாட்டுப்பற்றை சந்தேகித்து இதுவரை அவர்மீது கண்டன அறிக்கை விட்டவர்களின் வாயை அடைத்திருக்கிறார்.. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளியாக வேண்டும் என்பதை டார்கெட்டாக வைத்திருபதையும் அறிவித்துள்ளார் கமல்.

Comments are closed.