இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தகவிழாவில் கலந்துகொண்ட கமல், அந்த விழாவில் ‘விஸ்வரூபம்’ படத்தின் திரைக்கதையை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த விழாவில் கமல் பேசும்போது தனக்கு மலையாளம் நன்றாக பேசத்தெரியும்.. ஆனால் படிக்கத்தெரியாது என்பதையும் குறிப்பிட்டார்.