
ஸ்டைலிஷான படங்களை இயக்குவதில் வித்தகர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்தின் 53வது படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வெற்றிப் படமாக்கியவர் அடுத்து அஜித்தின் 57வது படத்தையும் இயக்க் இருக்கிறார்.
ஆனால் இப்போதுதான் கௌதம் மேன்ன் டைரக்ஷனில் அஜித் தனது 55வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் இன்னும் வருடம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஆர்யாவையும் தனது தம்பியையும் வைத்து ‘யட்சன்’ என்ற படத்தை ஆரம்பித்துவிட்டார். பட்டியல் சேகருடன் இணைந்து யுடிவி நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
அடுத்ததாக இதை முடித்த கையோடு பாலிவுட் பக்கம் வண்டியை திருப்புகிறார். ஆகவே விரைவில் பாலிவுட் படத்தை இயக்க்ப்போகிறார் விஷ்ணுவர்தன் என்கிற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.
Comments are closed.