‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலுக்கும் இயக்குனர் சுசீந்திரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இதகெல்லாம் ஒருபடி மேலாக தான் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் பிஸியான ஷெட்யூலிலும் கூட ‘பாண்டியநாடு’ படத்தை பார்த்திருக்கிறார் ஷங்கர். அதன் கதையிலும் மேக்கிங்கிலும் கவரப்பட்ட ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தைப்பற்றி, குறிப்பாக விஷாலின் நடிப்பைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல விஷாலுடன் சில நாட்கள் பணியாற்ற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளதுதான் ஹைலைட்டான விஷயம். ஆக, ஷங்கரின் அடுத்த படத்தில் விஷால்தான் ஹீரோ என்பது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இன்னொரு ஆச்சர்யம் விஜய், விக்ரம் அடுத்து விஷால் என ஷங்கரின் ஹீரோக்கள் பெயரும் ’வி’ என்ற எழுத்திலேயே தொடர்கிறது பார்த்தீர்களா? (என்ன ஒரு கண்டுபிடிப்பு?)