நீக்கம் ; விஷால் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை..!

115

vishal-2

இது கிட்டத்தட்ட எதிர்பார்த்த நடவடிக்கை தான். ஏற்கனவே நடிகர்சங்கத்தில் தனது அதிரடியான செயல்பாட்டின் மூலமாக கடந்தமுறை நடந்த தேர்தலில் பதவியை கைப்பற்றிய விஷால், அடுத்ததாக தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் ஒரு கைபார்க்க முடிவுசெய்திருந்தார்.. அதை அவ்வப்போது தனது பேச்சிலும் வெளிப்படுத்தி வந்தார்..

விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் விஷால்.. சங்கத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் விஷாலின் பேச்சுக்களும் நடவடிக்கையும் இருப்பதால் இந்தமுடிவை எடுத்துள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தனது போராட்டம் தொடரும் என கூறியுள்ளார் விஷால்.

Comments are closed.