விஷால் படத்தை வெளியிடுகிறார் அதர்வா பட தயாரிப்பாளர்..!

208

kathi-sandai-2

விஷால்-தமன்னா நடித்துள்ள ‘கத்திச்சண்டை படம் தீபாவளிக்கே திரைக்கு வரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் போஸ்ட் புரடக்சன் பணிகள் முடிவடைய தாமதம் ஆனதால் இந்தமாதம் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.. இந்தப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளதும், தலைநகரம், மருதமலை படங்களை தொடர்ந்து அவருடைய ஆஸ்தான காமெடியன் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப்பிறகு இந்தப்படத்தில் நடித்திருப்பதும் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது..

தவிர சூரியும் முக்கியவேடத்தில் நடித்துள்ளார். ஹி ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் இந்தப்படத்தை இம்மாதம் வெளியிடுகிறார்.

Comments are closed.