‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ ஆனார் பரத்..!

199

kadaisi-bench-karthi

இன்றைய ஸ்மார்ட் போன்களின் மாடர்ன் உலகில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி தனது தனித்துவத்தை இழந்தவற்றில் காதலும் ஒன்று. உண்மையில் காதலின் அர்த்தம் என்ன ? காதல் என்பது எதுவரை ? இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என முழுவதுமாக காதலை மையமாக கொண்ட கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிறது ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’..

காதலை பற்றி இவ்வளவு கேள்விகள் கேட்கும் இந்தப்படத்தில் ‘காதல்’ நாயகன் பரத் நடித்தல் தானே சரியாக இருக்கும்… ஆம்.. இந்தப்படத்தில் கல்லூரி மாணவராக, கடைசி பெஞ்ச் மாணவராக நடிக்கிறார் கார்த்தி. பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர், திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ரவி பார்கவன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Comments are closed.