காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தி சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மதகஜராஜா’ செப்-6ல் ரிலீஸாகிறது. விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி இரண்டுபேரும் நடித்திருக்கிறார்கள். காமெடியில் கலக்குவதற்கு சந்தானமும் இருக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுகிறது.
இந்தப்படத்தின் தலைப்பை சுருக்கி எம்.ஜி.ஆர் என்று வைத்தது நமக்கு தெரியும். இப்போது இந்தப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆவதால் தமிழில் எம்.ஜி.ஆர் பெயர் மாதிரி, தெலுங்கில் என்.டி.ராமாராவ் பெயரை குறிக்கும் விதமாக என்.டி.ஆர். என சூப்பரான பெயராக வைத்திருக்கிறார்கள். கேட்டால் படத்தின் டைட்டிலான ‘நடராஜா தனி ராஜா’ என்பதன் சுருக்கம் தான் இந்த என்.டி.ஆர் என்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், விஷால் இந்தப்படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சுந்தர்.சி, சந்தானம் காம்பினேஷன் என்பதால் தைரியமாக, உற்சாகமாகவே இருக்கிறார் விஷால்