தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘வி.ஐ.பி-2’ உருவாகியுள்ளது.. முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். இந்த இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.. இந்த இரண்டாம் பாகத்தில் பாலிவுட் சீனியர் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மற்றபடி அமலாபால், சமுத்திரக்கனி என முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்திலும் தொடர்கின்றனர்.
இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்படும் என தனுஷ் கூறியிருந்தார். அதன்படி இன்று மாலை நான்கு மணிக்கு இந்தப்படத்தின் டீசரை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் வெளியிட்டார்.. மேலும், “எனது நண்பரும் எனது சக நடிகரும், எனது நண்பரின் மருமகனுமான தனுஷ். அவரது புதிய பட டீசர் இதோ.. பெஸ்ட் ஆப் லக்” என வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் அமிதாப்.

Comments are closed.