ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.. படத்திற்கு விக்ரம்-வேதா’ என டைட்டிலும் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது..
இதெல்லாம் உண்மைதான் என்பதை நிரூபிப்பதைப்போல, இதுநாள் வரை யூகங்களாக சொல்லப்பட்டு வந்த ‘விக்ரம்-வேதா’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில் இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ‘யு டர்ன்’ புகழ் ஷரதா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்தப்படத்தை தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தான் தயாரிக்கிறது.
Comments are closed.