சூப்பர்ஸ்டார் ரஜினி-இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவருகிறது ‘2.O. இந்தப்படத்தை முன்னெப்போதும் இல்லாத ரஜினி படங்களைவிட மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம். இதன் இறுதிக்கட்ட படப்படிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது..
இந்த நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வரும் நவ-20ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது லைக்கா நிறுவனம். மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் இதற்கான விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ரஜினி, ஷங்கர், அக்சய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்கிறார்கள்..
இந்த விழாவை தொகுத்து வழங்குவதில் கூட ஒரு பிரமாண்டம் காட்ட இருக்கிறார் ஷங்கர்.. ஆம்… பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகரை, இந்த விழாவை தொகுத்து வழங்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். இந்த விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
Comments are closed.