சரியான நேரத்தில் விக்ரம் எடுத்த சரியான முடிவு..!

263

vikram right decison

ஹீரோக்களின் வாரிசுகளும் ஹீரோக்களாக களம் இறங்கி வரும் வரிசையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக களத்தில் குதித்துள்ளார்.. ஆனால் குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்களே அதுபோல துருவ் அறிமுகமாகும் படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் இருந்த சூர்யா, ஆர்யா, அதர்வா பாலாவின் படத்தில் நடித்தபின் தானே தங்களது புதிய இன்னிங்க்சை ஆரம்பித்தனர். அவ்வளவு ஏன், நடிகர் விக்ரம் கூட சினிமாவில் அறிமுகமாகி சாதாரண ஒரு ஹீரோவாகவே சில வருடங்களை கடத்திய நிலையில், பாலாவின் ‘சேது’ மூலம் தானே ஒரு புது அவதாரம் எடுத்தார்.

அதுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாகவும் அமைந்தது. இப்போது தனது மகனையும் பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்துவது சரியான நேரத்தில் விக்ரம் எடுத்துள்ள மிகச்சரியான முடிவு என்றே சொல்லலாம்.

ஆனால் அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இதுவரை தனக்கு மனதில் தோன்றிய, தன்னை பாதித்த கதைகளை மட்டுமே படமாக இயக்கிவந்த பாலா, முதன்முறையாக விக்ரம் மகனுக்காக தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார் என்பதுதான். தெலுங்கி வெளியாகி ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப்படத்தில் பாலா தனது முத்திரையை அழுத்தமாக் பதிப்பார் என உறுதியாக நம்பலாம்.

Comments are closed.