சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நவரச நாயகன் கார்த்திக் மவுனராகம் படத்தில் பேசிய புகழ்பெற்ற காமெடி வசனம், இல்லையில்லை வார்த்தை தான் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இன்றுவரை கார்த்திக் வாய்ஸில் மிமிக்ரி செய்பவர்கள் பலரும் இந்த டயலாக்கை சொல்லியே கார்த்திக்கை நினைவூட்டல் செய்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட வார்த்தை அவரது மகன் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றால் இதைவிட ஆச்சர்யம் வேறென்ன இருக்க முடியும். ஆம்.. கௌதம் கார்த்திக் முதன்முதலாக அவரது தந்தையுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘மிஸ்டர் சந்திரமௌலி’. என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக வரலட்சுமி, ரெஜினா இருவரும் நடிக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Comments are closed.