ஜூலை-25ல் விக்ரம் பட ஷூட்டிங் ஆரம்பம்..!

215

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடித்துள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தை வரும் அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி ரிலீஸாக வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்..

விக்ரம் தற்போது ‘அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு தயாராகிவிட்டார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை-25ஆம் தேதி மலேசியாவில் துவங்குகிறது. அடுத்து சென்னை பெங்களூரு ஆகிய இடங்களிலும் படப்படிப்பு நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வாலும் பிந்துமாதவியும் நடிக்கின்றனர்.

Comments are closed.