பிரசன்னா, சினேகா இருவரின் காதலுக்கும் அதைத் தொடர்ந்து திருமணத்துக்கும் அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தற்போது இவர் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிப்பவர் ‘ஜில்லா’ சிவன் நம்ம மோகன்லால் தான்.
தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண்ணாக நடித்த ராகினி நந்த்வானியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? அவர்தான் இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.