மேற்கு தொடர்ச்சி மலை ; விஜய்சேதுபதி விரக்தி கலந்த பெருமிதம்

214

mtm

கடந்த வெள்ளியன்று விஜய்சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை என்கிற படம் வெளியானது. லெனின்பாரதி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு வெண்ணிலா கபடி குழுவின் ஒரு சிறிய ரோலில் நடிக்க காரணமாக இருந்தவர் தான் இந்த லெனின் பாரதி.

ஒரு நல்ல படம் என்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இந்தப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.. ஆனால் அதைக்கேட்டு ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றால் பெரும்பாலான தியேட்டர்களில் இந்தப்படமே ஓடவில்லை என்கிறார்களாம்.

இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி சொல்லும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் விஜய்சேதுபதி. அதில் இந்த கேள்வியை விஜய்சேதுபதியிடமே கேட்டனர் நிருபர்கள்.. அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “இங்கே தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் தீர்மானிக்கின்ற படம் தான் தியேட்டர்களில் ரிலீசாக முடியும்.. அதைத்தான் ஜனங்களும் பார்க்கவேண்டும் என ஒரு சிஸ்டத்தை உருவாக்கி விட்ட்டார்கள். இந்தப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து நான் பார்த்தபோது எனக்கு திருப்தியே இல்லை.. அதனால் இந்தப்படத்தின் பிசினஸை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.. அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தை ஒருவரும் கேட்டு வரவில்லை..

ஆனால் இப்போது படம் ரிலீசாகி, பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருமனதாக பாராட்டுவதை பார்க்கும்போது, நான் தான் தவறு செய்துவிட்டேன் என நன்றாக தெரிகிறது.. என் ரசனையில் உள்ள குறைபாட்டை நான் உணர்ந்துகொண்டேன். ஒரு நல்ல படம் தயாரித்துளேன் என்கிற பெருமையை கூட நான் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.. அந்த பெருமை இத்தனை நாட்களாக படத்தை தூக்கி சுமந்த லெனின் பாரதிக்குத்தான் போய்ச்சேர வேண்டும்” என மனம் நெகிழ பேசினார் விஜய்சேதுபதி..

Comments are closed.