‘நான்’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது சலீம் படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடித்துவருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இதுவரை படத்தைப்பற்றிய தகவல்கள் எதையும் வெளியே கசியவிடாமல் பாதுகாத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது சலீம் படத்திற்காக ஒரு அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏதோ ஆடியோ வெளியீட்டுவிழா அழைப்பிதழ் என்று நினைத்துவிட வேண்டாம்.
படத்தில் ஒரு முக்கியமான கேரக்டராக, படத்தை நகர்த்திச் செல்லும் திருமண பத்திரிக்கை ஒன்றைத்தான் வெளியிட்டுள்ளார். அதில் சலீமின் திருமணத்துக்கு அவரது பெற்றோர்கள் அழைப்பதாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப்படத்தில் சலீம் என்ற டாக்டராக விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்பதையும் அந்த அழைப்பிதழே சொல்கிறது. நிர்மல்குமார் இயக்கும் இந்தப்படத்தில் ஆகாஷ் பரதசானி ஹீரோயினாக நடிக்கிறார்.