சோதனையான காலகட்டத்தில்தான் இருக்கிறார் வடிவேலு. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் ‘தெனாலிராமன்’படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் சிலர் தெரிவித்துள்ளார்கள். எப்படியும் இந்த வருட இறுதிக்குள் படத்தின் போஸ்ட் புரொட்க்ஷன் வேலைகள் உட்பட அனைத்தும் முடிந்துவிடும்.
நீண்ட நாட்கள் கழித்து வடிவேல் படம் வெளியாவதால் அதை சாதாராணமாக ரிலீஸ் செய்துவிட முடியுமா? அதனால் தனது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம் வடிவேலு. ஆனால் பொங்கல் அன்றுதான் விஜய்யின் ‘ஜில்லா’,அஜீத்தின் ‘வீரம்’, கார்த்தியின் ‘பிரியாணி’ என கனரக வாகனங்கள் ரேஸில் கலந்து கொள்கின்றன. இந்த ரேஸில் வடிவேலு தனது ஆட்டோவை ஓட்டுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.