வித்தியாசமான காம்பினேஷன் படங்களுக்கு நம்ம ஊரில் எதிர்பார்ப்பும் அதிகம்.. மதிப்பும் அதிகம். அந்தவகையில் தனுஷ்-இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகியிருக்கும் நய்யாண்டி படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. சற்குணம் கிராமத்து கதைகளில் அசத்துபவர். தனுஷோ சிட்டி ஹீரோ. அதனாலேயே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. தனுஷுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதும் இன்னொரு ஹைலைட். இந்தப்படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தார்கள். இப்போது சில காரணங்களால் ஒரு நாள் தள்ளி அக்-11ல் ரிலீஸ் செய்கிறார்கள். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள வணக்கம் சென்னை படமும் அன்றுதான் ரிலீஸாகிறது.