‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களில் தனி நாயகனாகவும் இன்னும் சில நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட தற்போதைய நிலையில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்த சுரேஷ், வேறுவழியின்றி அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தாராம். கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என கேட்டு அந்த இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம்.. காரணம் கதை ஆர்.கேசுறேஷை உலுக்கி விட்டதாம்.
அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம் தான் ‘வேட்டை நாய் ‘. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர், ஏற்கனவே அப்புக்குட்டியை ஹீரோவாக வைத்து ‘மன்னாரு’ படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர் தான். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள்
படத்தின் நாயகன் மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன் அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் ஒருத்தி அவனை யார் என்று உணர வைக்கிறாள். என்பதுதான் கதை. மலையும் மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறவுள்ளது.

Comments are closed.