“வனமகன்’ 2ஆம் பாகத்துல நடிக்கவெல்லாம் என்னை கூப்பிடாதீங்க” ; ஜெயம் ரவி..!

249

Vanamagan jayam ravi

ஏ.எ.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வனமகன்’ படத்தில் கட்டிலேயே பிராந்து வளர்ந்த காட்டுவாசியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி… சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது ஹாரிஸின் 50வது படம் என்பது ஸ்பெஷல்.

படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களை விட சைகை பாஷை தான் அதிகமாம்.. ஆனால் ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமே பஞ்சமே இல்லையாம்.. இந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார். இவர் பற்றி சமீபத்தில் நடைபெற்ற ‘வனமகன்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி, தமாஸாக என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

“இந்தப்படத்துல சில்வா மாஸ்டர் பண்ண வேண்டிய விஷயங்களை எல்லாம் என்னை பண்ண வச்சு செஞ்சுட்டாங்க.. அடுத்து செகன்ட் பார்ட்டுல நான்லாம் நடிக்க மாட்டேன்.. சில்வா மாஸ்டரையே வச்சு எடுத்துருங்க” என்று கலாட்டாவாக சொன்னார். அந்த அளவுக்கு ஜெயம் ரவியை பெண்டு நிமிர்த்திவிட்டார்களாம் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் ஸ்டண்ட் சில்வாவும்.

Comments are closed.