ஒருவழியாக அஜித்தின் 53வது படத்திற்கு ஆரம்பம் என தலைப்பு வைத்து சமீபத்தில்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் பட்த்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என ஆளாளுக்கு ‘மங்காத்தா’ ஆட ‘ஆரம்பி’த்து விட்டார்கள். ஏற்கனவே விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இனிமேலும் யூகங்களுக்கு இடம் கொடுக்க விரும்பாத சிறுத்தை சிவா படத்திற்கு ‘வீரம்’ என்று சூப்பரான டைட்டிலாக வைத்துவிட்டார்.
படத்தின் தலைப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்தப்படத்திற்கான போஸ்டர் டிசைனையும் சுதந்திரதின பரிசாக வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் இயக்குனர் சிவா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித் கிராமத்து இளைஞனாக புதிய தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.