ரஜினி டைட்டிலை கைப்பற்றிய பாபிசிம்ஹா..!

203

அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன..? ஆனால்.. பாபி சிம்ஹா ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிவிட்டாரே..

இருபது வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படமான ‘வீரா’ டைட்டில் தான் பாபி சிம்ஹா படத்திற்கு கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைகதை, வசனம் எழுத, கே.ராஜாராமன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடேய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே ‘கோ-2’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ என இதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் பாபி சிம்ஹா நடித்துக்கொண்டு இருக்கும்போது, மூன்றாவதாக தயாரிக்கும் படத்திலும் அவரையே ஹீரோவாக ஒப்பந்தம் செய்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர்களின் பாபி சிம்ஹாவின் தொழில் பக்தியை தெரிந்துகொள்ளலாம்.

அப்படிப்பட்டவருக்கு தாங்கள் செய்யும் கைமாறுதான் ரஜினி பட டைட்டிலை பெற்று அவர் நடிக்கும் படத்திற்கு வைத்தது என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

Comments are closed.