கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு படத்திலேயே ஓஹோவென உயரத்திற்கு போவது ஒருவகை என்றால், ஒருவரது நடிப்பும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லப்படுவது இன்னொருவகை.. இதில் வரலட்சுமி சரத்குமார் இரண்டாவது வகையை சேர்ந்தவர்.
அழகும் நடிப்பு திறமையும் வாய்ந்த வரலட்சுமியை திரையுலகம் இப்போதுதான் சரியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் அதிக படங்களில் நடித்த நடிகையாக வரலட்சுமி முதல் இடம் பிடித்தது நிசாயமாக அவரது திறைமையினால் தான். அவை எல்லாம் ஹிட் படங்களாகவும் அதில் வரலட்சுமியின் நடிப்பு பேசப்படும்படியாகவும் அமைந்தது.
தற்போது விஷாலின் ‘சண்டக்கோழி-2’, கௌதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திரமௌலி, விமலுடன் கன்னிராசி, தனுஷுடன் மாரி-2, தனது தந்தை சரத்குமாருடன் ‘பாம்பன்’ மற்றும் எச்சரிக்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார் வரலட்சுமி.
இன்று நடிகை வரலட்சுமியின் பிறந்தநாள்.. இந்த பிறந்தநாளில் அவருக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் பரிசுதான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு. அதுமட்டுமல்ல எண்பதுகளில் சூப்பர்ஹிட்டான நீயா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘நீயா-2’ படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது பிறந்தநாளை மேலும் சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.
குறித்துக்கொள்ளுங்கள்.. வரலட்சுமியின் உண்மையான இன்னிங்க்ஸ் இப்போதுதான் துவங்கியுள்ளது.. இனிவரும் வருடங்களில் வரலட்சுமி தவிர்க்கமுடியாத கதாநாயகிகள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இருப்பார் என அடித்து சொல்லலாம்.
வரலட்சுமிக்கு நமது behindframes.com சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..

Comments are closed.