
பொதுவாக தமிழ்சினிமாவை பொறுத்தவரை மலையாளத்தில் இருந்து இங்குவரும் நடிகைகள் தான் கொடிகட்டி பறக்கிறார்கள்.. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், லட்சுமி மேனன் உட்பட 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் நம் தமிழ் சினிமாவில் இருந்து மலையாளத்திற்கு சென்று வரவேற்பு பெற்றவர்கள் என சமீபகாலமாக எந்த நடிகையையும் குறிப்பிட முடியாத சூழல் இருந்தது..
அந்தநிலையை மாற்றியுள்ளார் நடிகை வரலட்சுமி.. ஆம்.. தந்தை சரத்குமாரை தொடர்ந்து அவரைப்போலவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் அறிமுகமாகியுள்ளார் வரலட்சுமி. 5 வருடங்களுக்கு பிறகு அதிரடி போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்தப்படத்தின் பெயர் ‘கசாபா’. பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கியுள்ள இந்தப்படம் நேற்று ரிலீஸாகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் நடித்துள்ள வரலட்சுமியின் அதிரடி நடிப்புக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கேரளாவில் நடைபெற்று வந்தபோது வரலட்சுமியும் தவறாது கலந்துகொண்டு படக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Comments are closed.