மத்திய அரசுக்கு வைரமுத்து முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள்..!

212

இரு தினங்களுக்கு முன்னர் தான் தனது சிவகுமார் அறக்கட்டளை சார்பாக பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விழாவில் நடிகர் சிவகுமார் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்கவேண்டும் என்கிற கோரிக்கையை அரசுக்கு முன்வைத்து ஆவேசத்துடன் பேசினார்.

தற்போது இதேபோன்ற மூன்று கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன் வைத்து வரும் ஜூலை 12ஆம் தேதி கோவையில் தமிழ்நடைப் பேரணி’ நடத்த இருக்கிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமா ஒரு பாடமாக்கக் கோரியும், தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்கக் கோரியும், தமிழக நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டியும் வலியுறுத்தியும் தான் இந்த நடைப்பேரணி நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து ஜூலை-13ல் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கலந்து கொள்ளும் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா மற்றும் வைரமுத்து மணிவிழாவும் கோவை கொடீசியா அரங்கில் நடைபெற இருக்கிறது. சொல்லப்போனால் இந்த விசாக்களின் ஒரு அங்கம் தான் இந்த நடைப்பேரணி.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய வைரமுத்து, “இந்த விழா இலக்கியவிழா மற்றும் எனது மணிவிழாவாக நடைபெருவதாக இருந்தாலும் இதன் நோக்கமே திருக்குறளை தேசியநூலாக்க வேண்டும் என்பதும் தமிழை நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக்கவேண்டும் என்பதும் தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும் என்பதும் தான்” என குறிப்பிட்டார்.

இந்த விழாவில் நாக்கு தலைமுறை இயக்குனர்களான பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வைரமுத்துவை வாழ்த்த இருக்கின்றனர். விழாவில் “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் ‘ என்னும் தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பல்கலைக்கழகங்களின் 60 ஆய்வேடுகள் தொகுதி வெளியிடப்படுகிறது.

Comments are closed.