‘உறுமீன்’ ட்ரெய்லருக்கு வந்த சிக்கல்..!

224

பாபி சிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’வும் கலையரசனுக்கு ‘மெட்ராஸ்’ படமும் பளீர் வெளிச்சம் கொடுப்பதற்கு முன் அவர்கள் இருவரையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் உறுமீன்.. ஆனால் அவர்களது புகழ் வெளிச்சமே இப்போது படத்திற்கு டபுள் பிளஸ் ஆக அமைந்துவிட்டது. சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்தப்படத்தின் மையக்கருவே பழிவாங்குதல் தானாம். அதற்கேற்ற மாதிரி பக்காவாக ஒரு ட்ரெய்லரை ரெடிபண்ணிக்கொண்டு சென்சார் சான்றிதழுக்காக எடுத்துக்கொண்டு போக, சென்சாரோ ட்ரெய்லரை பார்த்துவிட்டு சான்றிதழ் தர மறுத்துவிட்டதாம். காரணம் படத்தின் டேக்லைன் தானாம்.

அதாவது பழிவாங்குவதுதான் படத்தின் சாராம்சம் என்பதால், படத்தின் என்ட் கார்டில் ‘ரிவெஞ்ச் இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்’ என டேக்லைன் போட்டு முடித்திருக்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி. அதே டேக்லைனை ட்ரெய்லரிலும் பயன்படுத்தியிருந்தார். அதில் தான் வந்தது சிக்கலே..

அந்த வாசகத்தை தூக்கினால் தான் சான்றிதழ் தருவோம் என்கிறது சென்சார். ஆனால் கதையின் முக்கியத்துவம் கருதி ரசிகர்களை அது சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அதை தூக்க மறுக்கிறார் இயக்குனர். யு/ஏ சான்றிதழ் கேட்டுப்பார்த்தும் கூட சென்சார் மசியவில்லை. அதனால் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த பிரச்சனையை கொண்டுசெல்ல இருக்கிறாராம் சக்திவேல் பெருமாள்சாமி.

Comments are closed.