பிரச்சனையை சொல்லிவிடுகிறோம். யார்மீது தவறென்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். மலையாளத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் மேஜர் ரவி. மோகன்லால் தான் இவரது ஆஸ்தான ஹீரோ. இவர் தமிழிலும் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இப்போது இவருக்கும் மலையாள இளம் நடிகர் உன்னி முகுந்தனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. காரணம் விசித்திரமானது. உன்னிமுகுந்தனிடம் தான் இயக்கும் படத்தில் நடிக்கும்படி கேட்டார் மேஜர் ரவி. அதற்கு உன்னி முகுந்தன் தனக்கு ஸ்கிரிப்ட்டை கொடுக்கும்படி சொல்ல, அவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டார் மோகன்லாலே தன்னிடம் கதை கேட்டதில்லையென்றும் தன்னிடம் உன்னிமுகுந்தன் கதைகேட்டு அவமானப்படுத்தி விட்டதாகவும் நினைத்தார் மேஜர் ரவி.
தற்போது இயக்குனர் ஜோஷி இயக்கிவரும் சலாம் காஷ்மீர் படத்தில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்குவதில் ஜோஷிக்கு உதவி செய்வதற்காக மேஜர் ரவி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். இவர் உன்னிமுகுந்தன் தன்னை அவமதிதத்தை மனதில் வைத்துக்கொண்டு சண்டைக்காட்சிகளின்போது உன்னிமுகுந்தனை வேண்டுமென்றே பல டேக்குகள் எடுக்கவைத்த்தோடு அதனை மற்றவர்கள் முன்னிலையில் கிண்டலும் செய்திருக்கிறார்.
இதனால் கோபமான உன்னி முகுந்தன், மேஜர் ரவியுடன் சண்டைக்கு போய்விட்டார். பின் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி இருவரையும் விலக்கியுள்ளனர். இதனால், தான் இனி ஒருபோதும் மேஜர் ரவியின் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறாராம் உன்னி முகுந்தன். பிரச்சனைகள் எப்படியெல்லாம் வருகின்றது பாருங்கள்.