உள்குத்து இயக்குனரின் ‘கண்ணாடி’யில் சந்தீப்..!

240

kannadi

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

‘திருடன் போலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ தற்போது இயக்கி வரும் படம் ‘கண்ணாடி’ சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் இணைந்து ஆனந்த்ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார்களாம்

கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம். மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்

இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து “V ஸ்டுடியோஸ்” உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ படத்தை தயாரித்த மற்றும் அமலாபால் நடிப்பில் ‘ஆடை’ எனும் திரைப்படத்தை தயாரித்து வரும் V ஸ்டுடியோஸ் நிறுவனம் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த ‘கண்ணாடி’யை தயாரித்து வருகிறது.

Comments are closed.