‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘உள்குத்து’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் கார்த்திக் ராஜு. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ளது.
‘பிகே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வரும் மே-12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
“எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்று தயாரிப்பாளர் விட்டல் குமார்.

Comments are closed.